tiruchengode

Language: English

கல்வெட்டுக்கள்:

திருச்செங்கோட்டில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் சில செப்பு பட்டயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அதிகளவில் உள்ளன. அவற்றை கொண்டே திருமலையில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோயிலை பற்றிய செய்திகளை தெரிந்துகொள்ள முடிகிறது. விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அரசரின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் அரசரின் ஆனையை ஏற்று இப்பகுதியில் அதிகளவிளான நற்பணிகளை செய்துள்ளனர். அவர்களில் முக்கியமாக கிபி 16-ம் 17-ம் நூற்றாண்டில் திருச்செங்கோட்டுக்கு அருகே உள்ள மோரூரில் வசித்த வந்த கண்ணங்கூட்டத்தை சேர்ந்த திப்பராச உடையார், திரியம்பக உடையார் மற்றும் நரசிம்ம உடையார் அவர்களை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. அதே போல் திருமலையில் அத்தப்ப நல்தம்பி காங்கேயன் மற்றும் இவரது மகன்களான அத்தப்ப இம்முடி காங்கேயன், குமாரசாமி காங்கேயன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM