tiruchengode

Language: English

பூஜைகள்:

உமையொருபாகனுக்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. அதே போல் திருப்பள்ளி எழுச்சியும் கிடையாது. இங்கு உச்சிகால பூஜை மட்டும்  நடைபெறும். மஹாசிவராத்திரி அன்று மட்டும் நாலுகால பூஜைகள் நடைபெறும். பார்வதிதேவியால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கத்தற்கு முதலில் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. பிறகு எண்ணைக்காப்பு, பால், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, தேன், மலர்கள், போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பிறகு இறைவனுக்கு பலவகை மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. உலகிலேயே வேறு எங்கும் இல்லாதவண்ணம் அர்த்தநாரீஸ்வரர் அர்ச்சனையின் போது ஒரு நாமம் பெண்பாலுக்குரியதாகவும், அடுத்த நாமம் ஆண்பாலுக்குரியதாகவும் அர்ச்சிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.இங்கு அம்மையப்பனின் காலடியில் உள்ள தேவதீர்த்தம் எப்போதும் வற்றாமல் உள்ளது. வேறு எங்கும் இல்லாதவாறு இக்கோவிலில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் இத்தலம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகார தலமாகவும் உள்ளது.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM