tiruchengode

Language: English

கிரிவலம்:

கிரி என்பது மலை என பொருள்படும் கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரி முதலியனவும் கிரியாகிய மலையை குறிக்கும் சொல்லாகும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல், (மலையை வலபக்கத்தில் தொடஙகி சுற்றி வழிபட்டுவருதல்) என்பதாகும். அர்த்தநாரீஸ்வரர் மலையாகிய திருச்செங்கோடு எனும் கிரியை வலம் வருவது திருச்செங்கோட்டு கிரிவலம் என்பர். திருச்செங்கோட்டு கிரி ஓங்காரவடிவானது ஓங்காரம் சிவ வடிவமானது. எனவே கிரி என்பது சிவவடிவமானது என இதனால் புலப்படுகிறது. சிவ வலம் வந்து பெரும் பலன் அத்தனையும் நாககிரி வலம் வருதலால் கிட்டும் என்று கூறுவர். பெளர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோட்டை வலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும்.

திருச்செஙகோட்டில் மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம் கிரிவலம் தொடங்கும் இடம். முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வர வேண்டும்.கிரிவலம் வரும் போது மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமச்சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவண்ணம் வரவேண்டும் என்றும்,காலணி மற்றும லாகிரி வஸ்துகளை தவிர்த்தல் வேண்டும் என்றும்,வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது என்றும்,எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும் என்றும்,கிரிவலம வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது என்று கிரிவலம் வரும் முறையை கூறுவர்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM