tiruchengode

Language: English

திருவிழாக்கள்:

திருச்செங்கோட்டு மலையில் சிவன், பார்வதி, முருகன், திருமால், போன்ற பல தெய்வங்கள் உள்ளதால் வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் இங்கு திருவிழாக்கள் நடைபெறும். முக்கியமாக சித்திரை மாதம் சித்திராபௌர்ணமியும், வைகாசி மாதத்தில் வைகாசி விசாகமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், ஆடிமாதம் ஆடிப்பூரவிழாவும், ஆவணிமாதம் ஆவணிஅவிட்டமும், விநாயகர் சதுர்த்தியும், புரட்டாசிமாதம் கேதார கௌரி விரதமும், ஐப்பசியில் நாகேஸ்வரர் அன்ன அபிஷேகமும், சூரசம்ஹாரமும், கார்த்திகை மாதம் கார்த்திகை தீப கூம்பும், மார்கழியில் படித்திருவிழாவும், தைமாதம் தைப்பூசத் திருவிழாவும், மாசி மாதம் மாசிமகமும், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும் வைகாசி விசாகம்.

இத்திருவிழா மொத்தம் 14 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதை பிரமோற்சவம், மஹாத்ஷவம் என்றும் கூறுவர். இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும் . எல்லா கோயில்களிலும் கொடிமரம் ஒன்று மட்டுமே அமைந்திருக்கும்.ஆனால் இங்கு மூன்று கொடி மரம் அமைந்துள்ளது ஆலயத்தின் தனிச்சிறப்பு . இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் ஆகியவை மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்பட்டு திருத்தேர் மீது வைத்து திருக்கொடிமாடசெங்குன்றூரின் நான்குமாட வீதிகள் வழியாக தேர்இழுத்து செல்லப்படும். பிறகு சுவாமிக்கு திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும். 14 ஆம் நாள் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவாவின் போது சுவாமிகள் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் எடுத்து செல்லப்படும்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM