tiruchengode

Language: English

அருள்மிகு பட்டீஸ்வரர் ஆலயம்:

தரைமட்டத்தில் இருந்து 2000 அடி உயரத்தில் மலைக்கோவிலின் உச்சியில் பிள்ளையார் சிலை உள்ளது. இதனை மக்கள் உச்சிப்பிள்ளையார் என்று அழைப்பர். முன்னொரு காலத்தில் மேருமலையின் சிகரத்தில் வந்தியபாடான சிகரத்தின் அருகே ஒரு சிவலிங்கத்தை நிறுவி பிரம்மனும் திருமாலும் வழிபட்டனர். அந்த லிங்கத்திற்கு வந்தீசர் என பெயரிட்டனர். நாரத முனியின் வேண்டுகோளின் படி சூரபன்மன் என்பவன் அந்த சிகரத்தையும், சிவலிங்கத்தையும், எடுத்து வந்து நாககிரியின் உச்சியில் வைத்து வழிபட்டுவந்தான்.

கி.பி.9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இங்கு ஒரு கோவிலை கட்டினார். இக்கோவிலில் லிங்கம் ஒன்றை நிறுவி விளக்கு வைத்து பூசித்தான். அன்று முதல் இச்சிகரம் பட்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கும் மறவாமல் வந்து செல்கின்றனர்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM