tiruchengode

Language: English

அருள்மிகு செங்கோட்டுவேலவர்


முருகன் திருக்கைலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார். அதன் பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். இங்கு வந்த பின் அம்மையப்பனின் வேண்டுகோளுக்கு இணங்க தேவர்களை துன்புறுத்திய அசுரர்களான தரகாசுரன் மற்றும் அவனது தம்பியுமாகிய சூரபன்மன் இருவரையும் முருகன் கொன்றார். மகா வல்லமை பெற்ற சூரபன்மன் பல வடிவங்களை எடுத்து முருகனை கொல்ல நினைத்தான். ஆனால் முருகன், சூரன் கடைசியாக எடுத்த மாமரத்தினை இரண்டாக பிளந்து அது மீண்டும் சேரா வண்ணம் அதை கீழ் மேலாக மாற்றி போட்டார். அப்போது சூரன் முருகனிடம் ஒரு வரம் வேண்டினான். அதாவது எனது உடலாகிய இரு பிளவுகளில் ஒன்று உன்னை சுமக்கவும் மற்றொன்று உன் கொடியிலிருந்து கூவவும் விரும்புகிறது என்றான்.

அதன்படி அவன் உடலின் ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றி தன் கொடியிலுமாக தன்னுடன் சேர்த்துக்கொண்டார். முருகன் இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாதவண்ணம் வலது கரத்தில் சக்திவேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அனைத்த வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறார். இங்கு செங்கோட்டுவேலவருக்கு தனி சன்னதியும் உள்ளது.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM