tiruchengode

Language: English

தேவியர் இடபாகம் பெற்ற கதை:

திருக்கைலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் முருக பெருமான் கோபம் கொண்டு நாகாசலம் வந்ததால் பார்வதி கவலைகொண்டார். இதை கண்ட சிவன் பார்வதியை மகிழ்வூட்ட அவரை இயற்கை வளங்கள் நிறைந்த தாருக வனத்திற்கு அழைத்து வந்தார். பல்வேறு இயற்கை காட்சிகளைக்கண்டு மகிழ்ந்த பார்வதிக்கு முல்லைக்கொடி ஒன்று மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை சிவன் காட்டினார். அதை கண்ட பார்வதி வெட்கப் பட்டு சிவனின் கண்களை தன் கைகளால் மூடினார். இதனால் அண்டசராசரங்கள் அனைத்தும் இருண்டன. பார்வதி தன் கைகளை விலக்கவே அந்த இருள் நீங்கியது.

திடீரென்று ஏற்பட்ட இருளின் காரணமாக உலகின் அணைத்து வழிபாட்டு முறைகளும் மாறின. இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதை கண்ட பார்வதி சிவனிடம் இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க நாம் இருவரும் தனித்தனி என்ற முறை மாறி ஒருவர் என்ற நிலை உருவாகவேண்டும் என்று வேண்டினார். இந்த வேண்டுகோளை ஏற்று தேவியருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக சிவன் ஒப்புக்கொண்டார். அதற்காக பார்வதியிடம் இமயமலையிலும், காசியிலும், காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றன் கரையிலும், கடைசியாக திருவண்ணாமலையிலும் தவம் செய்து சாப விமோச்சனம் பெறவேண்டும் என்று கூறினார். பார்வதி தேவியும் அவ்வாறே தவம் செய்தார். இறுதியில் திருவண்ணாமலையில் சிவன் பார்வதிக்கு காட்சி தந்து நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு ஆளானாயோ அந்த முருகன் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள திருக்கொடிமாடச்செங்குன்றூரில் குடிகொண்டுள்ளான். அதனால் அதுவே நாம் தங்குவதற்கு ஏற்ற இடம் என்று கூறி அங்கு சென்று தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி பார்வதியும் அங்கு சென்று தவம் செய்து சிவனுடன் இரண்டற கலந்து அர்த்தநாரீஸ்வரராக கட்சியளிகின்றனர்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM