tiruchengode

Language: English

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம்:

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 386 கி.மீ தொலைவில் உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மேற்கே 38 கி.மீ தொலைவிலும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கிழக்கே 24 கி.மீ தொலைவிலும், சேலத்தில் இருந்து தெற்கே 50 கி.மீ தொலைவிலும், கரூர் மாவட்டத்தில் இருந்து வடக்கே 61 கி.மீ தொலைவிலும் உள்ளது. இம்மலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 2000 அடி உயரத்திலும், அடிவாரத்தில் இருந்து சுமார் 650 அடி உயரத்திலும் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில்வரை 1206 படிகள் கொண்ட நடை பாதையும் வாகனங்கள் மேலே செல்ல மலை பாதையும் தனியாக உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதை 2.5 கி.மீ தொலைவு உள்ளது. தமிழ்நாட்டின் அணைத்து இடங்களில் இருந்தும் மலைக்குச் செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன. திருச்செங்கோட்டிற்கு அருகில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இரயில் நிலையங்களும் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல அணைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளும் உள்ளன.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM